சமூகம் – புதிய ஆத்திச்சூடி | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

சமூகம் – புதிய ஆத்திச்சூடி | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

வணக்கம் !

‘’புதிய ஆத்திச்சூடி’’ என்ற கவிதை ஆனது அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களால் உருவாக்கப்பட்டதாகும்.

உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 ஆகும். இந்த 12  எழுத்துக்களைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை இக்கவிதை விளக்கும்.

உயிர் எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சமுதாயம் என்பது பல கட்டமைப்புகளை உள்ளடக்கியதாகும்.

இக்கவிதையில், மக்கள் தினம் தோறும் சந்திக்கும் பிரச்சனைகளைக் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கவிதையானது ஆத்திச்சூடி வடிவில் இருக்கும்.

வாருங்கள்! கவிதையை காணலாம்.

 

புதிய ஆத்திச்சூடி –  கவிதை குழல் 

அறிவை பகிர்வது குற்றமோ! இல்லை

அறிவை தன்னிடத்தில் வைப்பது குற்றமா?

ஆதாயம் வழங்குவது குற்றமோ! இல்லை

ஆதாயத்தை எதிர்பார்ப்பது குற்றமா?

இன்றியமையாதை சேமிப்பது குற்றமோ! இல்லை

இன்றியமையாதை அழிப்பது குற்றமா?

ஈகை அளித்தல் குற்றமோ! இல்லை

ஈகையை இகழ்வது குற்றமா?

உறைவிடம் தேடுவது குற்றமோ! இல்லை

உறைவிடத்தை அழித்தது குற்றமா!

ஊடகம் பார்ப்பது குற்றமோ! இல்லை

ஊடகத்தையே பார்ப்பது குற்றமா?

எண்ணத்தை வெளிப்படுத்துவது குற்றமோ!  இல்லை

எண்ணாமல் இருப்பது குற்றமா?

ஏணியை பெறுவது குற்றமோ! இல்லை

ஏணியை பெற முயற்சிக்காதது குற்றமா?

ஐயத்தை நீக்குவது குற்றமோ! இல்லை

ஐயத்தை ஏற்படுத்துவது குற்றமா?

ஒருவராய் இருத்தல் குற்றமோ! இல்லை

ஒருவரோடே இல்லாமல் இருப்பது குற்றமா?

ஓடையை உருவாக்குவது குற்றமோ! இல்லை

ஓடையை மாசு படுத்துதல் குற்றமா?

ஒளடதம் வழங்குவது குற்றமோ! இல்லை

ஒளடத பொருளை பயிர்களுக்கு இடுவது குற்றமா?.

-கவிதை குழல்

 

இக்கவிதையில் பல தூய தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதன் அர்த்தங்களைப் புரிந்தால் மட்டும்தான் இந்த கவிதைக்கான உண்மை பொருளையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கவிதையில் உள்ள சொற்களின் பொருளை விளக்குவதுடன் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கும் விடைகளை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

அறிவு என்பது ஒரு பிரச்சனையை தீர்க்க வல்ல சிந்தனையை வழங்கக் கூடியது ஆகும். 

ஆதாயம் என்பது உதவியை குறிக்கும் சொல்லாகும். 

இன்றியமையாதது என்பது வாழ்விற்கு முக்கியமான தேவையை தீர்த்து வைக்கக்கூடிய பொருளாகும்.

ஈகை என்பது கொடை உள்ளத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

உறைவிடம் என்பது ஒருவர் தங்கும் இடத்தை குறிக்கும் சொல்லாகும்.

ஊடகம் என்பது தொலைக்காட்சியை குறிக்கும்  நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எண்ணம் என்பது தனது சுய சிந்தனையை குறிக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏணி என்பது உயரமான பகுதியை அடைவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணம் ஆகும்.

ஐயம் என்பது சந்தேகத்தை குறிக்கும் சொல்லாகும்.

ஒருவர் என்பது தனி நபரை குறிக்கும் சொல்லாகும்.

ஓடை என்பது நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும்.

ஔடதம்  என்பது மருந்து பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.

இக்கவிதையில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கான பொருளை உணர்ந்து இருப்பீர்கள்.

இந்த பொருளின் துணைகொண்டு மேலே உள்ள குறிப்பிட்டுள்ள வார்த்தைகளின் பொருளை உணர்ந்து, உண்மை பொருளை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றில் எது சரி எது தவறு என உங்கள் அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து சரியான தீர்வை தேர்ந்தெடுங்கள்.

நல்ல சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொரு நபரின் கையிலும் தான் உள்ளது.

நன்றிகள்! 

– கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published.