தேசப்பற்று கவிதைகள் – நாடு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

தேசப்பற்று கவிதைகள் – நாடு | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

நாட்டின் முன்னேற்றம்!

தனிமனிதனின் முன்னேற்றமே

ஒரு நாட்டின் முன்னேற்றமாகும்.

–   கவிதை குழல்

தேசப்பற்று கவிதைகள்

 

 

கவிதை விளக்கம்:

வணக்கம்!

இக்கவிதையானது ஒரு நாடானது வளர்ச்சி அடைய வேண்டுமெனில் தனி மனிதனுடைய பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்துகிறது.

ஒரு நாடு முன்னேறினால் மட்டும் தான் அந்த நாட்டிலுள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

அதாவது நாட்டின் பொருளாதார நிலையானது மேம்பட்டால் தான் ஒவ்வொரு குடிமகனின் குடும்ப சூழலும் மேம்படும்.

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் தனது உழைப்பை நாட்டிற்காக செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் தன்னை எப்பொழுது மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்க ஆரம்பிக்கிறனோ அப்போதே அவன் தன் குடும்பத்தையும் நாட்டையும் மேம்படுத்த தொடங்குவான்‌‌.

ஒருவன் தன்னுடைய திறனால் மட்டும் தான் தன்னை இவ்வுலகில் நிலைபெறச் செய்ய முடியும்.

ஒருவனுடைய திறமையானது ஒரு போதும் அவன் முயற்சி செய்யாமல் அவனிடத்தில் வெளிப்படுவதில்லை.

ஒவ்வொருவரும் தன் திறமையை எப்போழுதும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பற்பல பயிற்சிகளை மேற்கொண்டு தினம்தோறும் தனது அறிவையும், தனது உடல் வலிமையும், மனவலிமையும் பெருகிக் கொண்டே செல்ல வேண்டும்.

அப்போதுதான் ஒருவனுடைய முன்னேற்றமானது அவனுடைய வாழ்வில் வெளிப்படும்.

ஒருவனுடைய வாழ்வானது மகிழ்ச்சியடைய தொடங்கினாலே போதும், அவன் நாட்டிற்காகவும் உழைக்க தொடங்குவான்.

அந்த மகிழ்ச்சியானது எவ்வாறு உருவாகும் என்றால் அவன் தன்னுடைய திறமையை செயலில் வெளிப்படுத்தும் போது தான்.

ஒரு செயலை மேற்கொள்ளும் போதுதான் அச்செயலின் மூலம் அவன் பொருள் ஈட்ட முடியும்.

ஒருவன் பணம் சம்பாதிக்க தொடங்கினால் மட்டும் தான் அவன் பொருளாதார சூழலை அவனால் சமாளிக்க இயலும்.

ஒருவரின் தேவையைப் பூர்த்தி செய்வது இங்கு பணமாக தான் காணப்படுகின்றது.

பணம் மட்டும் தான் வாழ்க்கையா? என்று சொல்பவர்களும் இங்கு உண்டு. பணம் என்பது வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரு கருவியே ஆகும்.

ஒரு கருவி இருந்தால் தான் அதன் மூலம் பயனடைய முடியும். அத்தகைய கருவியாகிய பணமே வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது.

ஒருவன் தன்னுடைய வாழ்வில் ஒரு வேளை கூட பசி இல்லாமல் எப்போது வாழத் தொடங்குகின்றானோ, அப்போதே ஒரு நாடும் வளர்ச்சியடையும்.

பசியற்ற வாழ்வே மன நிம்மதியை ஏற்படுத்தும். மன நிறைவு கொண்ட வாழ்வே ஒருவன் தன்னுடைய வாழ்வில் தீய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை தடுக்க செய்யும்.

ஒருவனுடைய வாழ்வில் எப்போது வறுமையானது குடி கொண்டு இருக்கின்றதோ, அதுவே அவனை தீய செயல்களை செய்யத் தூண்டுகின்றது.

ஒருவனுக்குப் வறுமை ஆனது ஏற்படும் பொழுது, தனது திறமையின் மீது முழு நம்பிக்கை கொண்டு, பொருளை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சி ஒன்றே எல்லா வித துன்பங்களுக்கும் தீர்வாக உள்ளது.

ஒரு நாடானது முன்னேற வேண்டுமென்றால் தனிமனிதனின் முன்னேற்றமும் இன்றியமையாததாகும்.

ஒவ்வொருவரும் தனிமனித முன்னேற்றத்தில் தன்னை மேம்படுத்திக் கொண்டு நாட்டை முன்னேற்றுவதில் தங்களின் கடமை என கொண்டு வாழ வேண்டும்.

ஒவ்வொருவரும் தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி தனது நாட்டிற்காக உழைத்து நாட்டை முன்னேற்றுங்கள்.

நன்றி!

 – கவிதை குழல்

 

 

Leave a Reply

Your email address will not be published.