காலமறிதல் | Kavithai Kuzhal – Tamil Kavithaigal

காலமறிதல் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் காலத்தால் ஆகக்கூடியது என்ன?, காலத்தை நோக்கி ஏன் செயலை செய்ய வேண்டும்?,அதனால் வரும் பயன் என்ன?, காலத்தின் முக்கியத்துவம் போன்ற காலத்தைப் பற்றிய பல கேள்விகளுக்கு கவிதைகள் வாயிலாக விடையை அறியலாம்.

 காலம் என்பதற்கான முன்னுரையை முதலில் நாம் பார்க்கலாம். பிறகு கவிதைகளை காணலாம்.

காலம் என்பது எந்த ஒரு செயலுக்கும் முக்கியம் ஆகும். எவ்வளவு வலிமை, சக்தி, ஆற்றல் இருந்தாலும் காலம் அறியாமல் ஒரு செயலை மேற்கொண்டால் வெற்றியை பெற இயலாது.

நாம் ஆடிப்பட்டம் தேடி விதை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள், வெயில் உள்ள போதே உலர்த்திக்கொள் போன்ற பழமொழிகளை கேட்டிருப்போம்.

 இவையெல்லாம் காலத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுகின்றன அல்லவா.

விவசாயமாக இருந்தாலும் சரி வேறு தொழில் செய்வதாக இருந்தாலும் சரி காலமானது மிக முக்கியமாகும்.

காலத்தை பொறுத்து அனைத்து பொருள்களும் விற்பனை அடைகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காலமறிந்து செய்வதால்,  செய்யும் தொழிலானது எவ்வித பாதிப்பும் இன்றி வெற்றியடையும்.

சக்தி, ஆற்றல், பணியாட்கள் என பல இருந்தாலும் காலம் அறியாமல் தொழிலை மேற்கொண்டால் வெற்றியை ஈட்ட முடியாது.

காலநிலைக்கு ஏற்ப  பயிரிடுவது போல தொழிலையும் காலத்திற்கு ஏற்ப விரிவாக்க வேண்டும்.

காலத்தின் தன்மைக்கேற்ப வேலை செய்வதால் மட்டுமே மேற்கொண்ட செயலில் வெற்றியடைய முடியும்.

காலமானது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது. 

காலமறிந்து ஒரு செயலை மேற்கொண்டாலும், எதிர்பார்த்ததை அடைய முடியவில்லை என்றால் அதனை விட்டு விடுதல் கூடாது.

நாம் மேற்கொண்ட தொழிலுக்கான காலம் வந்தாலும், மக்களின் தேவையை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.  அப்போது தான் மேற்கொண்ட தொழிலுக்கான வெற்றியானது கிட்டும்.

உதாரணமாக ஒரு சிறு நிகழ்வை காண்பதன் மூலமாக காலத்தின் மூலம் கிடைக்கும் பயன்களை புரிந்து கொள்ளலாம்.

ஒரு விற்பனையாளர் இரு பொருள்களை விற்பனை செய்து வருகிறார். ஒன்று உப்பு மற்றும் மற்றொன்று மாவு ஆகும்.

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்க  சென்றால், மாவானது காற்றால் அடித்துச் செல்லப்படும். அதுபோல மழை பெய்யும் நேரத்தில் உப்பு விற்கச் சென்றால், உப்பானது நீரில் கரைந்துவிடும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் காணும்போது காலமானது எவ்வளவு முக்கியம் என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.

இது போல தான் நாம் எந்த ஒரு தொழிலையும் மேற்கொள்ளும் போதும், காலமானது அவசியமாகும்.  அப்போதுதான் மேற்கண்ட தொழிலுக்கான வெற்றியானது வந்தடையும்.

காலத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்வதற்காக,  கவிதை குழல் ஆனது காலம் அறிதல் என்ற தலைப்பில்  குறிப்பிட்டுள்ள கவிதைகளை உங்கள் வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலமறிதல் கவிதைகள்;

1.  காலமறிந்து தொழிலைச் செய்.

இல்லையெனில் காலத்திற்காக காத்திரு.

 

2. செயலை செய்வதற்கு தக்க காலம் கண்டவுடன்,

    செய்வதற்கு அரியவான  செயல்களை செய்ய  வேண்டும்.

 

3. காலம் கூடும்போது மன ஊக்கம்  போதும் ஒன்றே போதும்.

    அதுவே மேற்கொண்ட செயலை முழுமையாக முடிப்பதற்கு உதவும.

 

4. காலம்  கைகூடும் போது பதட்டமின்றி செயலை செய்ய வேண்டும்.

அப்போதுதான் செயலை சரிவர செய்ய முடியும்.

-கவிதை குழல்

Leave a Reply

Your email address will not be published.